search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர்கள் பங்கேற்பு"

    தஞ்சையில் விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு முகாமுக்கு 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
    தஞ்சாவூர்:

    இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆள்சேர்ப்பு முகாம் தஞ்சையில் உள்ள சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இந்த முகாம் வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    முதல் கட்டமாக இன்று தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. இன்று நடந்த முகாமில் அரியலூர், சென்னை, கோவை, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு உடற்திறன் மற்றும் எழுத்து தேர்வு ஆகியவை நடத்தப்படுகிறது. முகாமை தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, ஆர்.டி.ஓ.சுரேஷ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    இதில் டெல்லி குரூப் கமாண்டர் ஸ்ரீவர்சன் மற்றும் வின்கமாண்டர் சைலேஷ்குமார், ஜமால் ஆகிய அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆள்சேர்ப்பு முகாமில் ஈடுபட்டனர்.

    இன்று காலை தஞ்சையில் விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு முகாமுக்கு 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து 2-வது கட்டமாக வருகிற 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு நடைபெறுகிறது. #tamilnews
    ×